×

அறைக்குள் அரசியல் செய்யும் கட்சி நாளைக்கு இருக்காது: செல்லூர் ராஜூ கடும் தாக்கு

மதுரை: மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் என்ற முகத்தை வைத்து மக்களை ஏமாற்றலாம் என்று, சினிமா நடிகரெல்லாம் கிளம்பி விட்டனர். கூட்டத்தை வைத்து ஓட்டு போட்டுடுவாங்கன்னு நினைக்கிறாங்க… இன்றைக்கு உச்சபட்ச நடிகர் அரசியலுக்கு வந்திருக்காரு இல்லையா? அவரை வச்சு படம் எடுத்து எத்தனை பேர் தெருவுல நின்னுருக்காங்க… எம்ஜிஆரைப்போல ஆயிடுவோம்னு நினைச்சு வந்தால் காணாமத்தான் போவாங்க.

நாங்கள் அடிமை என்று சொல்லும் விஜய் இப்போதுதான் வந்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு 2 தடவை கூப்பிட்டாங்க… வீராப்பில் இருந்திருக்க வேண்டியதுதானே? சூரப்புலி தனத்தை காட்ட வேண்டியதுதானே? 41 பேர் இறந்தாங்க. எங்கேயாவது இந்த வரலாறு இருக்கா? இறந்தவங்க வீட்டுக்காரங்களை தன்னோட வீட்டுக்கு கூப்பிட்டு கேதம் கேட்குற காட்சி புதுசுங்க. அவரை பார்க்க வந்த பிஞ்சு குழந்தைங்க, பெண்கள் இறந்திருக்காங்க. அரசியல் இயக்கம் துவங்கிட்டு, அறைக்குள் உட்கார்ந்து அரசியல் செய்தால் எப்படி? இதையெல்லாம் பார்த்தா அரசியல்ல இருக்குறவன் போயிடணும் போல இருக்குப்பா. இப்பவே இப்படின்னா… நாளைக்கு இந்த கட்சியெல்லாம் இருக்கும்ங்கிறீங்களா? இருக்குமா? எனக்கு சந்தேகம்தான். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மதுரை ஜீவா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘புதிதாக வந்தவர்கள் புதிய ஆட்சியை கொடுத்து விடுவோம் என்று சொல்வார்கள். அவர்களது பப்பு எல்லாம் இங்கு வேகாது. இளைஞர்களே… நடிப்பை வைத்து நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். அவர்களுக்கு கொள்கை இருக்கிறதா? எந்த நடிகர்களின் பேச்சுக்கும் இளைஞர்கள் ஆளாகாதீர்கள்’’ என்றார்.

Tags : Cellur Raju ,Madurai ,Madura ,minister ,Celluor Raju ,
× RELATED புதுப்புது அடிமைகள் வந்தாலும்...