- துணை முதல்வர் உதவிசெயலாளர்
- ஸ்டாலின்
- தஞ்சை
- முதல் அமைச்சர்
- கே
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- உத்தவ் தானி ஸ்டாலின்
- டெல்டா பிராந்தியம் திமுக மகளிர் மரு
- தஞ்சிபர்
- மைக்
தஞ்சை: பெண்களுக்கு பார்த்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்று வரும் டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மைக் என்று நினைத்து கண்ணாடியை பார்த்து பிரதமர் மோடி பேசியுள்ளார். தேர்தல் எப்போதும் வந்தாலும் ஒன்றிய பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார். பாஜகவின் நம்பர் 1 முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். புதுப்புது அடிமைகள் வந்தாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஒன்றிய அரசின் அடையாளம் பாசிசம், முந்தைய அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம்’ எனவும் உதயநிதி பேசினார்.
