சாத்தான்குளம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பேய்க்குளத்தில் ‘உள்ளம் நாடி இல்லம் தேடி’ என்ற பிரசார நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தேமுதிக சட்டமன்றத்திற்குள் நுழைந்து இப்பகுதி வளர்ச்சிக்கு குரல் கொடுக்கும்.
தேமுதிக மக்களுக்கான கட்சி. எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம். விஜயகாந்த் வழியில் பயணிப்போம். வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பிப்.20க்கு மேல் அறிவிக்கப்படும். அப்போது தொண்டர்கள், மக்கள் எதிர்பார்க்கிற கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் புதிய வரலாறு காண்போம் என்றார்.
