- மோடி
- எடப்பாடி
- வைகோ சரவெடி
- திருச்சி
- மதிமுக
- பொதுச்செயலர்
- வைகோ
- திருச்சி விமான நிலையம்
- திமுக
- காங்கிரஸ்
- பிரதி பொது செயலாளர்
- கனிமொழி
- ராகுல் காந்தி…
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக, காங்கிரஸ் இடையே உள்ள பிரச்னை என்பது நீர் விடுத்த வடு போல மறைந்து போகும். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, ராகுல் காந்தியை சந்தித்து பேசி உள்ளார். தேர்தல் தொடர்பாகவும் பேசியதாக செய்தி வந்துள்ளது. இதில் எதுவும் நெருடல் இருக்காது. அதிமுகவை, மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் எவ்வளவு அவமான படுத்தினாலும் அதை சகித்து கொண்டிருந்தவர் முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி. அவர் கனிமொழி, ராகுல் காந்தி சந்திப்பு குறித்து பேச தகுதியற்றவர். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என பிரதமர் மோடி காணும் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைமையிடம் பேசி அதன் பின் முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
