×

ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

தாராபுரம்,ஜன.23: மூலனூர் அருகே மின் பாதை அமைக்கும் தனியார் நிறுவனத்தின் பணிக்கு எதிராக கிராம மக்கள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள தூரம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

மூலனூர் அடுத்துள்ள தூரம்பாடி கிராமத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் ஒப்பந்ததாரர் மூலமாக காற்றாலை மின்சாரம் மற்றும் சோலார் மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கு கிராம பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில்,வண்டிப் பாதைகள் மற்றும் நீர்நிலைகளில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீர்நிலைகள் விவசாய காடுகளின் ஓரங்களில் மின்சாரத்தை கொண்டு செல்லும் கேபிள்கள் மூலமும் மின் கம்பிகள் மூலமும் பொதுமக்களுக்கும், வளர்ப்பு கால்நடைகளுக்கும் வாழ்வாதார சிக்கல்கள் ஏற்படும். எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் தெரிவித்து உள்ளனர்.

 

Tags : RTO ,Tharapuram ,Mulanur ,Thurambadi village ,Tiruppur district ,
× RELATED பராமரிப்பின்றி வாடும் மரக்கன்றுகள்