உடுமலை, ஜன. 28:உடுமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், தடுப்பணை ஓரங்களிலும் சாலை ஓரங்களிலும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அந்தந்த ஊராட்சிகள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.மரக்கன்றுகளை சுற்றிலும் தென்னை ஓலைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பல ஊராட்சிகளில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்காமல் இருப்பதால் அவை வாடி வருகின்றன. பல இடங்களில் மரக்கன்றுகள் பட்டுப்போய் விட்டன. மேலும், பல ஊராட்சிகளில் மரக்கன்றுகள் காய்ந்து வருகின்றன.எனவே, ஊராட்சி நிர்வாகங்கள் மரக்கன்றுகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
