×

டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்க திருப்பூர் மாணவர் தேர்வு

திருப்பூர், ஜன. 24: ஒன்றிய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட அரசு சார்பாக விருந்தினராக கலந்துகொள்ள கோவை, பாரதியார் பல்கலைக்கழகம் சார்பாக 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு- 2 சேர்ந்த பூபதிஆகாஷ் (இரண்டாம் ஆண்டு வேதியியல் துறை) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர், ஒருவர் மட்டுமே அரசு கல்லூரியை சேர்ந்தவர் என்பதும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை, பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு- 2 திட்ட அலுவலர் மோகன்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள் வழியனுப்பி வைத்தார்கள்.

 

Tags : Tiruppur ,Delhi Republic Day parade ,Bharathiar University ,Coimbatore ,Republic Day parade ,Delhi ,Union Ministry of Youth Affairs and Sports ,Tamil Nadu National Welfare Project… ,
× RELATED வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்