×

பைக் மீது பஸ் மோதி மீன் வியாபாரி சாவு

பாலக்காடு, ஜன. 24: பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே புலமந்தோள் பகுதியில் கேரள அரசு பஸ், பைக் மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.பட்டாம்பியை அடுத்த கொப்பம் மண்ணேங்கோட்டைச் சேர்ந்த மொய்தீன்குட்டி மகன் முகமது ராபி (33). இவர், மீன் வியாபாரி. இவர் தனது பைக்கில் வீட்டிலிருந்து பட்டாம்பி நோக்கி நேற்று முன்தினம் மாலை சென்றபோது எதிரே திருவனந்தபுரத்திலிருந்து மானந்தவாடிக்கு சென்ற அரசு பஸ் முகமது ராபி ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த முகமது ராபியை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Palakkad ,Kerala government ,Pulamandhol ,Pattambi ,Palakkad district ,Mohammed Rabi ,Moideenkutty ,Koppam Mannengott ,
× RELATED வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்