×

முத்தூர் அரசு பள்ளியில் ஊக்கத்தொகை வழங்கல்

காங்கயம், ஜன.28: முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்ற ஆண்டு பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெற்ற 13 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. இதில் ரூ.1,20,000 வழங்கப்பட்டது.

விளையாட்டு போட்டிகள், திருக்குறள் ஒப்புவிப்பு போட்டிகளில், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் ஊக்க தொகை வழங்கப்பட்டது. கோவை பூ.சா.கோ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஜெனிபர் அண்டனி கலந்து கொண்டு பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

 

Tags : Muthur Government School ,Kangayam ,Muthur Government Higher Secondary School ,Thirukkural ,
× RELATED அவிநாசி அருகே இளைஞர் விளையாட்டு திருவிழா