×

அவிநாசி அருகே பரிதாபம் மின்சாரம் பாய்ந்து மேஸ்திரி பலி

அவிநாசி, ஜன.28: குன்னத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர். இங்குள்ள ஆயிக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (47). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கவுரி (35). இவர்களுக்கு 3 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

ராஜன் பொடாரம்பாளையம் சின்னசாமி (56) என்பவர் கட்டும் வீட்டில் நேற்று ஈரமான சாரங்களில் நின்றுவேலை பார்த்ததார். அப்போது, மேலே சென்ற உயிரழுத்த மின் கம்பி மீது ஈரமான சாரம் மோதியது. இதில், மின்சாரம் பாய்ந்து ராஜன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags : Avinashi ,Gunnathur ,Tiruppur district ,Rajan ,Ayikavundampalayam ,Gauri ,
× RELATED அவிநாசி அருகே இளைஞர் விளையாட்டு திருவிழா