×

ஜார்க்கண்டில் நக்சல் தலைவர் உட்பட 15 பேர் என்கவுண்டரில் பலி

ராஞ்சி: ஜார்க்கண்டில்,பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் நக்சலைட்டு தலைவர் பதிராம் மாஞ்சி உட்பட 15 நக்சல்கள் கொல்லப்பட்டனர். ஜார்க்கண்ட், மேற்கு சிங்பும் மாவட்டத்தில், சரண்டா காடுகளில் கிரிபுரு என்ற இடத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாகபாதுகாப்பு படையினர் சென்ற போது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரண்டு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 15 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதில் பதிராம் மாஞ்சி முக்கியமானவர். இவர் மீது ஜார்க்கண்ட் அரசு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்திருந்தது.

Tags : Naxal ,Jharkhand ,Ranchi ,Naxals ,Pathiram Manji ,Naxalites ,Kiripuru ,Saranda ,West Singhbhum ,Jharkhand… ,
× RELATED அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 88...