திருமயம், ஜன. 21: திருமயத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து திருமயம் மின்வாரிய செயற்பொறியாளர் அக்னிமுத்து வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (22ம்தேதி) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் திருமயம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான குறைகளை மனுவாகவோ, நேரடியாகவோ தெரிவிக்கலாம். கூட்டத்தில் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
