×

பொது விநியோகத்திட்ட சிறப்பு குறை தீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வருகிற 24ம் தேதி பொது விநியோகத் திட்டம் சம்மந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு, உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் வருகிற 24ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுருளிஅள்ளி கிராமத்திலும், ஓசூர் வட்டத்தில் தாசேப்பள்ளி கிராமத்திலும், போச்சம்பள்ளி வட்டத்தில் மாவத்தூர் கூட்ரோடு, ஊத்தங்கரை வட்டத்தில் மேல்லக்கம்பட்டி, பர்கூர் வட்டத்தில் மரிமானப்பள்ளி, சூளகிரி வட்டத்தில் எர்ராண்டப்பள்ளி, தேன்கனிக்கோட்டை வட்டத்தில் சாரகப்பள்ளி, அஞ்செட்டி வட்டத்தில் எருமுத்தனப்பள்ளி ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது. எனவே, குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinesh Kumar ,
× RELATED குடியரசு தினவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்