×

திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற களப்பணியாற்றுவோம்

 

கோவை, ஜன. 20: கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சுதன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கோவையில் வார்டு, சர்க்கிள், மற்றும் மாவட்ட அளவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் வகையில் தேர்தல் குழு அமைத்து தீவிர களப்பணியாற்ற வேண்டும். மக்கள் பிரச்னைகளை இளைஞர் காங்கிரஸ் சார்பாக கோவை மாவட்ட நிர்வாகத்திடம் கொண்டுசென்று உரிய தீர்வுகாண வழிவகை செய்ய வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்துசெய்த ஒன்றிய பா.ஜ. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சட்டமன்ற தொகுதி தலைவர்கள் சதீஷ், சுரேஷ், ஹரிஹரன், லாரன்ஸ், மதன், விக்னேஷ், கமலேஷ், சுபாஷ், கார்த்திக், விகாஸ், ஷாம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Thimuk-Congress alliance ,Goa ,Executive Committee of the Youth Congress of Goa Municipal District ,District ,President ,Sudhan ,
× RELATED சிஆர்பிஎப் முகாம் வளாகத்தில் தொழிலாளி தற்கொலை