×

கோத்தகிரி பகுதியில் சாரல் மழையுடன் பனி மூட்டம்: குளிரால் மக்கள் அவதி

கோத்தகிரி: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பகல் நேரங்களில் நிலவும் சாரல் மழையுடன் கூடிய பனிமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பகல் நேரங்களில் சாரல் மழையுடன் கூடிய பனிமூட்டம் சூழ்ந்த காலநிலை நிலவி வருகிறது. குறிப்பாக கோத்தகிரி நகர் பகுதிகள் மட்டுமல்லாமல் கீழ் கோத்தகிரி, கொடநாடு, கட்டபெட்டு, அரவேனு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை மற்றும் பனிமூட்டம் காணப்படுகிறது.

பகலில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், மலைப்பாதையில் பகல் நேரங்களில் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

Tags : Kotagiri ,KOTHAGIRI ,Nilagiri District Kotagiri ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...