×

உலக அளவில் 2025ல் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்: ஐநா சபை வெளியிட்ட புதிய அறிக்கை

 

புதுடெல்லி,: உலக அளவில் 2025ம் ஆண்டில் அதிக குழந்தைகள் பிறந்த நாடுகளின் பட்டியலில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலக மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பிறப்பு விகிதம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ‘எங்கள் உலகம் தரவுகளில்’ என்ற அமைப்பின் மூலம் ஐநா சபை வெளியிட்டுள்ள ‘உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2024’ என்ற அறிக்கையின்படி, கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் மொத்தம் 13 கோடியே 23 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த பல நாடுகள் இதில் பின்தங்கியுள்ள நிலையில், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. புதிதாக வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா அசுர வேகத்தில் வளர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2025ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 2 கோடியே 30 லட்சத்து 73 ஆயிரத்து 268 குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ள சீனாவில், 87 லட்சத்து 9 ஆயிரத்து 352 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இந்தியாவின் குழந்தை பிறப்பு எண்ணிக்கையானது சீனாவின் எண்ணிக்கையை விடச் சுமார் இரண்டரை மடங்கு அதிகமாகும்.

76 லட்சத்து 40 ஆயிரம் பிறப்புகளுடன் நைஜீரியா 3வது இடத்திலும், 69 லட்சத்து 9 ஆயிரம் பிறப்புகளுடன் பாகிஸ்தான் 4வது இடத்திலும் உள்ளன. வல்லரசு நாடான அமெரிக்கா 36 லட்சம் குழந்தைகளுடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளையில், முதியவர்கள் அதிகம் வசிக்கும் ஜப்பான் 39வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India ,China ,UN ,Delhi ,UNITED NATIONS ,
× RELATED இந்திரா காந்தி- மோடி வித்தியாசத்தை...