×

ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2.76 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி: ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2.76 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (06.01.2026) டெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 47வது கூட்டத்தில், தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு செயலாளர், நீர்வளத்துறை ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., மற்றும் இரா.சுப்பிரமணியன், தலைவர், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு உறுப்பினர், தற்பொழுது (06.01.2026) மேட்டூர் அணையின் நீர் இருப்பு 65.360 டி.எம்.சி ஆக உள்ளது என்றும், அணையிலிருந்து வினாடிக்கு 8,400 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் நவம்பர் மாதம் கடைசி வாரத்திலும் மற்றும் டிசம்பர் மாதம் முதல் வாரத்திலும் டித்வா புயலினால் பெய்த கன மழை காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கர் பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அப்பகுதிகளில் மறுநடவு (Replanting) பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப்பகுதிகளுக்கு நீர் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார். கர்நாடக அணைகளின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு 2026, ஜனவரி மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 2.76 டி.எம்.சி நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதி செய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.

Tags : Caviar Management Commission ,Karnataka ,Tamil Nadu ,Delhi ,S. K. ,Kaviri Water Management Commission ,Haldar ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான...