- அமைச்சர்
- ஈ.வி.வேலு
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டாலின்.
- திருவண்ணாமலை
- அமைச்சர் E.V.Velu
- மு.கே ஸ்டாலின்
- திருவண்ணாமலை ஊராட்சி
- ஆட்சியர்
திருவண்ணாமலை, ஜன. 6: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த புதிய கூட்ட அரங்கத்தில் பொதுமக்களின் ேகாரிக்கை மனுக்களை அமைச்சர் எ.வ.வேலு பெற்றார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் போதுமான இடவசதியில்லை, எனவே, மனு அளிக்க வரும் பொதுமக்கள் கூட்ட அரங்கத்துக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
எனவே கலெக்டர் அலுவலக வளாகத்தில், புதிய கூட்ட அரங்கம் அமைக்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி ரூ.12.17 கோடி மதிப்பில் மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கம் புதியதாக கட்டப்பட்டது. குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த அரங்கத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் ெபாதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதிகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி நடந்த அரசு விழாவில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, புதிய கூட்ட அரங்கத்தில் நேற்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பொதுப்பணித்துறை அமைசசர் எ.வ.வேலு பெற்றுக்கொண்டார்.
அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: எல்லார்க்கும் எல்லாம் எனும் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திறந்து வைத்த இந்த கூட்ட அரங்கம் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் உருவாகும் முன்பு வடஆற்காடு மாவட்டமாக இருந்தது. அதனால், வேலூருக்கு சென்று கோரிக்கை மனுக்களை அளிக்க வேண்டிய நிலை இருந்தது. மாவட்ட வன அலுவலரிடம் மனு அளிக்க வேண்டும் என்றால் திருப்பத்தூருக்கு பொதுமக்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டியிருக்கும். கலைஞர் ஆட்சியில்தான் வடஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பரப்பளவில் பெரிய மாவட்டமான திருவண்ணாமலையில் விவசாய பிரதிநிதிகள், பொதுமக்கள், மாவட்ட வளர்ச்சி கூட்டம் போன்ற கூட்டங்கள் நடத்த போதிய இடமில்லாத காரணத்தால், முதல்வர் உத்தரவுபடி ரூ.12 கோடியே 17 லட்சம் 95 ஆயிரம் மதிப்பில் இந்த கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில், சிறப்பு விருந்தினர் அறை, மின் தூக்கி வசதி, பொது கழிப்பறை, கணினி அறை ஆகிய பல்வேறு வசதிகளுடன் 2 தளங்களுடன் கூடியமக்கள் குறைதீர்வு கூட்டரங்கம் கட்டப்பட்டுள்ளது. மேலும் நவீன வசதிகளுடன் கூடிய மக்கள் குறைதீர்வு கூட்டரங்கத்தை கட்டி தந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், ஆதிராவிடர் நலத்துறை சார்பாக 2025- 2026ம் ஆண்டிற்கான நல்லோசை களமாடு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்ற சமூக நீதி கல்லூரி விடுதிகளைச் சேர்ந்த 12 மாணவ- மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், டிஆர்ஓ ராம்பிரதீபன், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மேயர் நிர்மலாவேல்மாறன், மாவட்ட வன அலுவலர் சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், துரைவெங்கட் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பாக்ஸ்…
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூ.25,436 மதிப்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், ரூ.15,750 மதிப்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி, ரூ.9855 மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.21 லட்சத்தக்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.
கேப்சன்…
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கத்தில் மாற்றுத்திறனாளியிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெற்றுக்கொண்டார். உடன் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மேயர் நிர்மலா வேல்மாறன்.
