×

பஸ் பயண அட்டை புதுப்பிக்க இன்று முதல் சிறப்பு முகாம் திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள்

திருவண்ணாமலை, ஜன.7: திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 2026ம் ஆண்டுக்கான பஸ் பயண அட்டை இலவசமாக ஆன்லைன் வழியாக பதிவு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமமின்றி சென்றடையும் வகையில் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு இலவச ஆன்லைன் பஸ் பயண அட்டை வழங்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமில், இலவச பயண அட்டை வேண்டி கலந்துக்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள், புதுப்பிக்க மற்றும் பதிவு செய்திட மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவ சான்று, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கலந்துக்கொண்டு இலவச பயண அட்டையை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai Collector ,Dharbagaraj ,Tiruvannamalai District Disabled Persons Welfare Office ,
× RELATED முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில்...