×

செந்தில்பாலாஜி பேட்டி மக்கள் கோரிக்கை குளித்தலை அருகே மணவாசியில் சாலை பாதுகாப்பு விழா

குளித்தலை, ஜன.24: கரூர் எஸ்பி பகலவன் உத்தரவுப்படி 32வது சாலை பாதுகாப்பு மாத விழா குளித்தலை டிஎஸ்பிசசிதர் தலைமையில் கனரக இலகுரக மற்றும் சிற்றுந்து வாகன ஓட்டுனர்களுக்கு மணவாசி சுங்கச்சாவடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது டிஎஸ்பி பேசுகையில், சாலையில் வாகனங்களை எவ்வாறு ஓட்ட வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியவை குறித்து விளக்கமாக பேசினார். மேலும் ஓட்டுநர்கள் இடையே கலந்துரையாடல் நடைபெற்று இந்த வருடம் எந்த விதமான விபத்தும் இன்றி பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என்றார். போக்குவரத்து விதிகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது மேலும் சுங்க சாவடியில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாயனூர் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா குளித்தலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் தலைமைக் காவலர்கள் கலந்து கொண்டனர்

Tags : Senthilpalaji ,Interview People ,road safety ceremony ,Kulithalai ,Manavasi ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...