×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை: உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று அமலாக்கத்துறை பதில் மனு அளித்துள்ளது. ED வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் மனு அளித்துள்ளது. வழக்கின் விசாரணையை துவங்க உள்ளோம். செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 2வது முறையாக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. வழக்கை 3 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விசாரணை நாளை மறுநாளுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 14, 15 மற்றும் 21-ம் தேதிகளில் நடந்த விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து “செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அமைச்சராக இல்லை. அதனால் சாட்சியங்களை கலைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்.” என்று வாதிடப்பட்டது.

தொடர்ந்து நீதிபதி அளித்த தீர்ப்பில், “இந்த மனுவில் எந்த தகுதியும் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. எனினும், செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் அவர் மீதான வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும்” இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று அமலாக்கத்துறை பதில் மனு அளித்துள்ளது. ED வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் மனு அளித்துள்ளது. வழக்கை 3 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விசாரணை நாளை மறுநாளுக்கு தள்ளிவைத்துள்ளனர். செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 6ம் தேதி வரை நீதிபதி அல்லி நீட்டித்தார்.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை: உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு appeared first on Dinakaran.

Tags : minister ,Sentil Balaji ,CHENNAI ,ENFORCEMENT DEPARTMENT ,SENTHIL BALAJI ,Senthilpalaji ,ED ,Former ,Sentinel Balaji ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...