×

கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிபட்டியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலை சேதம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

 

கிருஷ்ணராயபுரம், ஜூன் 5: கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிபட்டியில் குடிநீர் குழாய் உடைப்பால் தார் சாலையில் ஏற்பட்ட சேத த்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சிந்தலவாடி ஊராட்சியில், புனவாசிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மகிளிபட்டியில் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த இரண்டு புதியதாக பாலங்கள் மற்றும் தார் சாலை அமைக்கப்பட்டது.

பாலம் அருகே சில மாதங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்ட தார் சாலையின் அடியில் குடிநீர் குழாய்கள் உள்ளது. அந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு வெகுநாட்கள் ஆகின்றதால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவ்வழியாக செல்லக்கூடிய பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற் கொண்டு சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிபட்டியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலை சேதம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Maglipatti ,Krishnarayapuram ,Karur District ,Krishnarayapuram Union ,Chinthalavadi Panchayat ,Punavasipatti ,Maklipatti ,Dinakaran ,
× RELATED பைக் மோதி நடந்து சென்ற சிறுவன் காயம்