×

மெல்போர்ன் ஆடுகளம் ரொம்ப மோசம்: ஐசிசி

லண்டன்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4வது டெஸ்ட், பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்தது. போட்டி துவங்கிய முதல் நாளில் 20 விக்கெட்டுகள் விழுந்து சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து 2வது நாளில் முடிவுக்கு வந்த அந்த போட்டியில் இங்கிலாந்து அணி மகத்தான வெற்றியை பெற்று பல்வேறு சாதனைகள் படைத்தது. போட்டி நடந்த மெல்போர்ன் மைதானத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்ட விதம் குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இந்நிலையில், 4வது டெஸ்ட் போட்டி நடந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், திருப்திகரமாக அமைக்கப்படவில்லை என்று கூறியுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஒரு தகுதிக்குறைப்பு புள்ளியை வழங்கி உள்ளது.

Tags : Melbourne ,ICC ,London ,England ,Australia ,Boxing Day Test ,Melbourne, Australia ,
× RELATED ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்களில் ஒன்றாக இணைந்தது GOOGLE GEMINI!