- பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட்
- இந்தியா
- பாகிஸ்தான்
- ஆசிய கிரிக்கெட் கவுன்சில்
- புது தில்லி
- பாக்கிஸ்தான்
- பெண்கள் ஆசியா கோப்பை
- 2026
- ஆசியா கிரிக்கெட் கவு
- ஆசியா கோப்பை
புதுடெல்லி: மகளிர் ஆசியா கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 கிரிக்கெட் போட்டியில், வரும் பிப்ரவரி 15ம் தேதி, பாகிஸ்தானுடன் இந்தியா அணி மோதவுள்ளது. ஆசியா கிரிக்கெட் கவுன்சில், மகளிர் ஆசியா கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 கிரிக்கெட் தொடரில் நடக்கும் போட்டி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்தொடரில், இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, வங்கதேசம் ஏ, இலங்கை ஏ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏ, நேபாளம், மலேசியா, தாய்லாந்து ஆகிய 8 அணிகள் மோதவுள்ளன. இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரிவுகளில் மோதும் அணிகளில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். டி20 வடிவத்தில் நடக்கும் இத் தொடரின் முதல் போட்டி, வரும் பிப்ரவரி 7ம் தேதி தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடக்கவுள்ளது. இந்தியா ஏ அணி, குரூப் ஏ- பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில், இந்திய அணி, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம் ஆகிய நாடுகளுடன் மோதும். குரூப் பி-யில் வங்கதேசம், இலங்கை, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா ஏ அணியில் இடம்பெறும் வீராங்கனைகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்தியா ஏ மோதும் போட்டிகள்
தேதி எதிரணி
பிப்ரவரி 13 எமிரேட்ஸ்
பிப்ரவரி 15 பாகிஸ்தான்
பிப்ரவரி 17 நேபாளம்
