×

டாடா மாஸ்டர்ஸ் செஸ்: முதலிடத்தில் எரிகைசி

விஜ்ஆன்ஸீ: டாடா மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் நேற்று, இந்திய வீரர்கள் குகேஷ் – அர்ஜுன் எரிகைசி இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. நெதர்லாந்தின் விஜ்ஆன்ஸீ நகரில் டாடா மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. 14 வீரர்கள் மோதும் இத்தொடர், 13 சுற்றுகள் கொண்ட போட்டிகளாக நடைபெறுகிறது. நேற்று நடந்த 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி மோதினர். போட்டியின் கடைசி வரை யாரும் வெல்ல முடியாத சூழ்நிலை காணப்பட்டதால் இருவரும் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர்.

மற்றொரு 3ம் சுற்றுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம், உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ் உடன் மோதினார். இருவரும் சிறப்பாக ஆடிய இப்போட்டியும் டிராவில் முடிந்தது. முதல் இரு சுற்றுகளில் தோல்வியை தழுவிய தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, செக் வீரர் தாய் டாய் வான் நுகுயென் உடன் நேற்று நடந்த 3வது சுற்றுப் போட்டியில் டிரா செய்தார். இன்னும் 10 சுற்றுகள் உள்ள நிலையில், எரிகைசி, அப்துஸட்டோரோவ், ஹான்ஸ் நீமான், புளுபவும், ஜோர்டென் வான் பாரஸ்ட் ஆகியோர் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். குகேஷ், அரவிந்த், துருக்கியின் யாகிஸ் கான் எர்டோக்மஸ், ஸ்லோவேனிய வீரர் விளாடிமிர் பெடோசீவ் தலா 1.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளனர்.

Tags : Tata Masters Chess ,Erikaisi ,Wijnsie ,Kukesh ,Arjun Erikaisi ,Wijnsie, Netherlands ,
× RELATED நியூசிலாந்துடன் தோல்வி ஏன்? இந்திய கேப்டன் கில் விளக்கம்