- பெண்கள் பிரீமியர் லீக்
- மும்பை
- வதோதரா
- மும்பை இந்தியர்கள்
- தில்லி தலைநகரம்
- சஜீவன் சஞ்சனா
- ஹேலி மேத்யூஸ்
வதோதரா: மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் நேற்று, மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய சஜீவன் சஞ்சனா 9 ரன்னிலும், ஹேலி மேத்யூஸ் 12 ரன்னிலும் அடுத்தடுத்து வீழ்த்து அதிர்ச்சி தந்தனர். பின் இணை சேர்ந்த நாட் சிவர்பிரன்ட், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த இணை, 3வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்மன்பிரீத், 41 ரன்னில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் மும்பை, 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்திருந்தது. நாட் சிவர்பிரன்ட் 45 பந்துகளில் 64, சன்ஸ்கிருதி குப்தா 10 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
