சென்னை: இளம் முறையினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் VibeWithMKS முதல் வீடியோ வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டில் கபில் தேவ், தோனியை பிடிக்கும் என முதல்வர் தெரிவித்தார். சாம்பியன்களின் உண்மையான வலிமை பதக்கங்களில் மட்டுமல்ல, விடா முயற்சி என எல்லாவற்றிலும் இருக்கிறது. இளம் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடியபோது அவர்களின் தெளிவு. நம்பிக்கையை கண்டு மிரண்டு போய்விட்டேன். இளைஞர்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு தனி நம்பிக்கை உண்டு என தெரிவித்தார்.
