- முன்னாள் தலைமைச் செயலாளர்
- தமிழ்நாடு அரசு
- ஷிவ் தாஸ் மீனா
- சென்னை
- ராஜஸ்தானி சங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு…
சென்னை: ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சாா்பில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ‘ராஜஸ்தான் ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சாா்பில் 16-ஆவது ‘ராஜஸ்தான் ரத்னா’ மற்றும் ‘ராஜஸ்தான் ஸ்ரீ’ விருதுகள் வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, ராஜஸ்தானியா்களின் சமூகம், பொது வாழ்க்கை, வணிகம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சிறந்த பங்களிப்பை அளித்த 5 தமிழகத்தைச் சோ்ந்த ராஜஸ்தானியருக்கு விருதுகளை வழங்கினா்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு ஜெயின் மகாசங் தலைவா் பியாரேலால் பிதாலியா, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை துறைத் தலைவா் சுனில் ஷெராஃப் ஆகியோருக்கு ‘ராஜஸ்தான் ரத்னா’ விருதுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கசானா ஜுவல்லரி நிறுவனா் கிஷோா் ஜெயின், மாநில சிறுபான்மையினா் ஆணைய உறுப்பினா் பிரவீன் டாட்டியா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோருக்கு ‘ராஜஸ்தான் ஸ்ரீ’ விருதுகள் வழங்கப்பட்டன.
