×

மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு: ரஷ்யாவின் ராணுவ தளபதி உயிரிழப்பு

 

மாஸ்கோ: ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் அந்நாட்டின் ராணுவ ஜெனரல் உயிரிழந்தார். உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் -ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு முயற்சிளை மேற்கொண்டு வருகின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

எனினும் இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய ஜெனரல் சர்வரோவ் தனது காரை இயக்கியபோது வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் அந்நாட்டின் ராணுவ ஜெனரல் உயிரிழந்தார். உக்ரைனின் உளவுத்துறை அமைப்புகளின் உதவியுடன் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக ரஷ்ய அரசு புகார் கூறியுள்ளது. எனினும், உக்ரைன் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

ரஷ்ய தலைநகரின் தெற்குப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ரஷ்யா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே சமயம் ஜெனரல் இகோர் கிரிலோவ் 2024 டிசம்பரில் ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Moscow ,Russia ,Ukraine ,NATO ,
× RELATED சென்னையில் தங்கம் விலை இன்று இரண்டு...