- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுகா தேர்தல் அறிக்கை
- கனிமொழி எம். பி.
- சென்னை
- திமுகா
- அறிக்கை
- அண்ணா என்டவலயா
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை செய்தது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை செய்தது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.எம்.அப்துல்லா, கார்த்திகேய சிவசேனாபதி, டாக்டர் எழிலன், தமிழரசி, டி.கே.எஸ். இளங்கோவன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், சுரேஷ் சம்பந்தம் பங்கேற்றனர். ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு சந்தித்து பேசியது. தொடர்ந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது; முதலமைச்சரின் ஆலோசனைகளை பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். மாநில உரிமைகளுக்காக போராடுவது உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையின் மையக் கருத்தாக இருக்கும் என்று கூறினார்.
