×

வங்கதேச மக்களுக்கு விசா வழங்குவதை காலவரையின்றி நிறுத்தி உள்ளதாக இந்திய அரசு அறிவிப்பு!

டெல்லி: வங்கதேச மக்களுக்கு விசா வழங்குவதை காலவரையின்றி நிறுத்தி உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ‘வங்கதேச இளைஞர் அமைப்பு தலைவர் உஸ்மான் ஹதி உயிரிழப்பை அடுத்து கலவரம் மூண்டுள்ளது. கலவரத்தின்போது இந்திய தூதரக அலுவலகங்கள் தாக்கப்பட்டதை அடுத்து விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது’ என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தின் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் இளம் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹதி (32) கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கான மாணவர் எழுச்சி போராட்டம் மூலம் பிரபலமடைந்தவர். இவர் வரும் 2026 பிப்ரவரியில் நடக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிட இருந்த நிலையில், கடந்த 12ம் தேதி பட்டப்பகலில் ஆட்டோவில் சென்ற ஹதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.

இதில் படுகாயமடைந்த ஹாதி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18ம் தேதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வங்கதேசத்தில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த டிசம்பர் 18ம் தேதி சிட்டகாங்கில் உள்ள இந்திய துணைத் தூதரின் இல்லத்தின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. அதேபோல, சிட்டகாங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீதும் சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து வங்கதேச மக்களுக்கு விசா வழங்குவதை காலவரையின்றி நிறுத்தி உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

‘வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. வங்கதேச இளைஞர் அமைப்பு தலைவர் உஸ்மான் ஹதி உயிரிழப்பை அடுத்து கலவரம் மூண்டுள்ளது. கலவரத்தின்போது இந்திய தூதரக அலுவலகங்கள் தாக்கப்பட்டதை அடுத்து விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது’ என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags : Government of India ,Bangladeshis ,Delhi ,Indian government ,Bangladesh Youth Organisation ,Osman Hadi ,
× RELATED கனிமொழி எம்பி தலைமையில் திமுகவின்...