கந்தர்வகோட்டை, டிச. 20: தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 7.5% இட ஒதுக்கீடு தற்சமயம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது இதனால் அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்று வரும் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் சேர்ந்து பயன்பட்டு வருகின்றனர். இந்த இட ஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டிலேயே 10% ஆக உயர்த்த வேண்டும் என்று புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
