×

மாநில அளவிலான கால்பந்து போட்டி

தர்மபுரி, டிச.22: தர்மபுரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி, வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை 3 நாள் நடக்கிறது. தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை மூன்று நாட்கள் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடக்கிறது. 11 பேர் பங்கேற்கும் இப்போட்டி மின்விளக்கு ஒளியில் இரவு -பகல் ஆட்டமாக நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 லட்சம் முதல் பரிசாகவும், 2ம் பரிசாக ரூ.60 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. சென்னை சிட்டி போலீஸ், தர்மபுரி, சேலம், நாமக்கல், மதுரை, ஈரோடு உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கால்பந்து அணிகள் பங்கேற்கின்றன. இதேபோல் பெங்களூர், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கால்பந்து அணியினர் பங்கேற்க உள்ளனர்.

போட்டிக்கான கால்கோள் விழா நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்களான இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் சிறப்பு எஸ்ஐ சூரியநாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஆனந்த், துணைத் தலைவர் அசோக்குமார், ஒருங்கிணைப்பாளர் தனசேகர், செயலாளர் கணேசன், துணை செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் குமரேசன் மற்றும் கால்பந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dharmapuri ,Dharmapuri District Sports Ground ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு