×

விஜய்க்கு அடுக்கு மொழியில் பேச யாரோ கற்றுத் தந்திருக்கிறார்கள்: திருமாவளவன் விமர்சனம்

சென்னை: தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்கு மொழியில் பேச விஜய்க்கு யாரோ கற்றுத் தந்திருக்கிறார்கள் என திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் .தொடர்ந்து, திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்கு மொழியில் பேச யாரோ கற்றுத் தந்திருக்கிறார்கள். மக்கள் முடிவுசெய்வார்கள்’’ என்றார்.

Tags : Vijay ,Chennai ,Thirumaalavan ,Chief Secretariat ,Mu. ,K. Stalin ,Tamil National People's Front ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...