சென்னை: பூவிருந்தவல்லி – போரூர் இடையிலான மெட்ரோ ரயில் பாதை சிக்னலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. சிக்னல் கட்டமைப்புக்கு ஒப்புதல் அளித்த நிலையில் ஓரிரு நாளில் ரயில்வே வாரியம் வேகச்சான்றிதழ் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிக்னலுக்கு ஒப்புதல் கிடைத்த நிலையில் வேகச்சான்றிதழ் கிடைத்தால் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான நடவடிக்கை தீவிரமடையும். பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான ஒப்புதலை விரைந்து வழங்கக் கோரி 2 வாரம் முன் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது.
