×

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி

வெலிங்டன்: நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட்இண்டீஸ் 205 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 278 ரன் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதையடுத்து 73 ரன்பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் நேற்றைய 2ம்நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன் எடுத்திருந்தது.

3வது நாளான இன்று பிராண்டன்கிங் 22 ரன்னில் ரன்அவுட் ஆனார். கவேம் ஹாட்ஜ் 35, ஷாய் ஷோப் 5, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 5, ஜஸ்டின் கிரீவ்ஸ் 25 ரன்னில் அவுட் ஆகினர். 46.2 ஓவரில் 128 ரன்னுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து பவுலிங்கில் ஜேக்கப் டஃபி 5, மைக்கேல் ரே 3 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் 56 ரன் இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் லதாம் 9 ரன்னில் அவுட்ஆக, கான்வே 28, கேன்வில்லியம்சன் 16 ரன் அடித்தனர். 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன் எடுத்த நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஜேக்கப் டஃபி ஆட்டநாயகன் விருது பெற்றார். 1-0 என நியூசிலாந்து முன்னிலை வகிக்க 3வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 18ம்தேதி தொடங்குகிறது.

Tags : West Indies ,New Zealand ,Wellington ,Christchurch ,West Indies… ,
× RELATED உடல் நலக்குறைவால் அக்சர் படேலுக்கு ஓய்வு