- திருமலா
- கவர்னர்
- ஆர்.என்.ரவி
- ஆளுநர் ஆர் என் ரவி
- திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள்
- ஜே.சேகர் ரெட்டி
- திருமலை…
திருமலை: திருமலையில் பக்தர்கள் தங்க ரூ.26 கோடியில் கட்டப்பட்ட கெஸ்ட் ஹவுஸை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெ.சேகர் ரெட்டி. இவரது நன்கொடையில், திருமலையில் பக்தர்கள் தங்குவதற்காக ரூ.26 கோடியில் அதிநவீன கெஸ்ட் ஹவுஸ் கட்டப்பட்டது. ஸ்ரீபாக்யா என்று பெயரிடப்பட்ட அந்த கெஸ்ட் ஹவுஸின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் ஸ்ரீபாக்யா கெஸ்ட் ஹவுஸை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள பெருமாள் சிலைக்கு சிறப்பு பூஜை மேற்கொண்டார். அப்போது தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் உடனிருந்தனர். விரைவில் இந்த கெஸ்ட் பக்தர்கள் பயன்பாட்டிற்கு தேவஸ்தானத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
