×

செங்கோட்டை குண்டுவெடிப்பில் கைதான சோயாப்பின் என்ஐஏ காவல் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு

 

புதுடெல்லி: செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சோயாப்பிற்கு மேலும் 10 நாட்கள் என்ஐஏ காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  செங்கோட்டையில் குண்டு வெடித்த வழக்கில் குண்டுவெடிப்பை நடத்திய உமர் உன் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக பரிதாபாத்தை சேர்ந்த சோயாப் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.

அவரது 10 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் நேற்று பலத்த பாதுகாப்புடன் சோயாப் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து முதன்மை மற்றும் செசன்ஸ் நீதிபி அஞ்சு பஜாஜ் சந்த்னா அவருக்கு மேலும் 10 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வெள்ளை காலர் தீவிரவாதத்துடன் தொடர்புடைய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழாவது குற்றவாளி சோயாப்.

 

Tags : NIA ,Shoyab ,Red Fort ,New Delhi ,Delhi ,Faridabad ,Umar Un Nabi ,Delhi Police ,
× RELATED உலக நாடுகள் இந்தியாவில் முதலீடுகள்...