×

அனில் அம்பானிக்கு எதிரான பணமோசடி வழக்கு மேலும் ரூ.1120கோடி சொத்து பறிமுதல்

 

புதுடெல்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவன தலைவர் அனில்அம்பானிக்கு எதிராக வங்கி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ரூ.8997 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளனர். பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான மேலும் ரூ.1120கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மும்பயைின் பல்லார்டு எஸ்டேட்டில் உள்ள ரிலையன்ஸ் மையம், வைப்புத் தொகைகள், வங்கி இருப்புக்கள், ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் பத்திரப்படுத்தப்படாத முதலீடுகளின் பங்குகள் உட்பட 18 சொத்துக்கள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் 7 சொத்துக்கள், ரிலையன்ஸ் பவர் லிமிடெட்டின் இரண்டு சொத்துக்கள், ரிலையன்ஸ் வேல்யூ சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்டின் 9 சொத்துக்கள் உட்பட மேலும் பல சொத்துக்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

Tags : Anil Ambani ,New Delhi ,Reliance Communications Limited ,Enforcement Directorate ,Reliance Group ,
× RELATED உலக நாடுகள் இந்தியாவில் முதலீடுகள்...