×

தென்ஆப்ரிக்கா வீராங்கனை தோழியுடன் நிச்சயதார்த்தம்

கேப்டவுன்: தென்ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் குளோ ட்ரையன். 31 வயதான இவர் தென்ஆப்பிரிக்காவுக்காக 3 டெஸ்ட், 124 ஒருநாள் மற்றும் 113 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். அண்மையில் இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் குளோ ட்ரையன் பங்கேற்று ஆடினார்.

இவர் தனது தோழியான நடன கலைஞர் மிஷெல் நேட்டிலுடன் நெருக்கமாக பழகி வந்தார். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மோதிரம் மாற்றிக்கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

Tags : Veerangan ,Kaptajn ,Glow Trian ,Audi ,South Africa ,Khloe Trian ,World Cup Series ,India ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி