×

2 போலீசார் சஸ்பெண்ட்

விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே நீதிமன்றம் சென்று திரும்பும் வழியில் கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூரைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன்(29). இவரை ஒரு வழக்கில் போலீசார் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தினர்.

பின்னர் திரும்பி வரும் வழியில் அழகாபுரி பகுதியில் போலீஸ் வாகனத்தை நிறுத்திவிட்டு தலைமை காவலர் மதனசாமி, போலீஸ்காரர் லிங்கராஜ் ஆகியோர் கைதி செந்தமிழ்ச்செல்வனுடன் ஓட்டலில் சாப்பிட சென்றனர். அப்போது கைதி செந்தமிழ்ச்செல்வன் போலீசாரிடம் இருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து 2 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tags : Virudhunagar ,Vathirairuppu ,Senthamilchelvan ,Kottayur ,Virudhunagar district ,Srivilliputhur ,
× RELATED விளையாட்டு அலுவலர்கள் மற்றும்...