- தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0
- பிரதி தலைமை நிர்வாக அதிகாரி
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- துணை தலைவர்
- தமிழ்நாடு விளையாட்டு மாநாடு
- வீரகாந்தாஸ்
- துணை தலைமை உதவி செயலாள
- ஸ்டாலின்
- தமிழ்
- தமிழ்நாடு
- விளையாட்டு
சென்னை: மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முன்னணி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான தமிழ்நாடு விளையாட்டு மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0-ஐ தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரூ.5 கோடி செலவில் அத்லெட் மேலாண்மை அமைப்பை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதன்முறையாக விளையாட்டு வீரர்களின் பயிற்சி, நல்வாழ்வு, செயல்திறன் மற்றும் மருத்துவ விவரங்கள் குறித்த தரவுகளை திறன்வாய்ந்த டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கின்றோம்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பே, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் வீரர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றோம். பதக்கங்களை வென்ற பிறகு, உயரிய ஊக்கத்தொகையையும் வழங்கி அவர்களை ஊக்குவிக்கிறோம். அதே போல, விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குகின்ற விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம், உடனடியாக அரசு வேலைகளையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வழங்குகின்றோம். டாஸ்கான் என்பது சிந்தனைகள் மற்றும் கருத்துகள் செயலாகவும், நடைமுறை படுத்துவதற்கும் ஏற்ற ஒரு தளமாகும்.
இந்த இரண்டு நாட்களையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும், வெளிப்படையாகக் கற்றுக்கொள்ளவும், புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடன் தங்கள் இடத்திற்கு திரும்ப வேண்டும். தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை சாம்பியன்களாக உருவாக்குவதையும், நிலையான விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதையும் அனைவரும் ஒன்றாக உறுதி செய்வோம். டாஸ்கான் 2025 மிகப்பெரிய வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஜேஷ், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை கமாலினி உள்பட பலர் பங்கேற்றனர்.
