×

விக்கிரமராஜா தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம்: தேனியில் நாளை நடக்கிறது

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42வது மாநில பொதுக்குழு கூட்டம் வருகிற 18ம் தேதி தேனி மாவட்டம், வீரபாண்டி, ஜானகி முத்தையா மகாலில் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகாண அரசிடம் பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டு, பெரும்பாலான கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளன.

நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற பொதுக்குழு வில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. வணிகர்கள் அன்றாடம் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, அதனை நிறைவேற்றுவதற்கான அழுத்தம் பொதுக்குழு கூட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படவுள்ளது.

Tags : State General Committee Meeting of Trade Unions ,Vikramaraja ,Teni. ,Chennai ,Secretary General ,Tamil Nadu Trade Unions ,Gowindarajulu ,42nd State General Committee Meeting of Tamil ,Nadu Trade Associations Federation ,Theni District ,Veerapandi ,Janaki Mutthaya ,Mahal ,A. M. Vikramaraja ,
× RELATED விளையாட்டு அலுவலர்கள் மற்றும்...