×

யானையை பார்க்க திரண்ட கூட்டத்தில் புகுந்த மினிவேனில் சிக்கி முதியவர் பலி

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தாவரக்கரை கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. யானையை பார்க்க அப்பகுதி மக்கள் சாலையோரம் திரண்டனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேனை போதையில் இருந்த கிளீனர் எடுத்து, யானையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்துக்குள் ஓட்டினார். இதில் வேன் சக்கரத்தில் சிக்கி முனிராஜ்(60) என்ற விவசாயி உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

Tags : Thekkady ,Thavarakkarai ,Krishnagiri district ,
× RELATED நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்...