×

வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் சென்னை விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து

சென்னை: வட மாநிலங்களில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலகிறது. இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தாமதமாக இயக்கம், திடீர் ரத்து போன்ற காரணங்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி உள்பட வடமாநிலங்களில் நேற்றும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

இதனால், டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கவுகாத்தி, வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 12 ஏர் இந்தியா விமானங்கள், இண்டிகோ புறப்பாடு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

அதேபோல், சென்னை வர வேண்டிய டெல்லி, கொல்கத்தா, வாரணாசி, புவனேஸ்வர், ஐதராபாத் உள்ளிட்ட 7 ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் வருகை விமானங்களும் நேற்று ரத்தானது. சென்னை விமான நிலையத்தில் ஒரேநாளில் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags : northern states ,Chennai airport ,Chennai ,northern ,Delhi ,
× RELATED விளையாட்டு அலுவலர்கள் மற்றும்...