×

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 2,100 சதுர அடி பரப்பளவில் காத்திருப்போர் கூடம் கட்டடத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 08.09.2025 அன்று ஆறு தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் சுமார் ரூ.28.75 கோடி மதிப்பீட்டில் துணை முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தற்சமயம் புதிய கட்டிடத்தில் தரை தளத்தில் அவசர சிகிச்சை, முதல் தளத்தில் புற மருத்துவ பயனாளிகள் பிரிவும், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் தளங்களில் இரத்த பகுப்பாய்வகம், உள் மருத்துவ பயனாளிகள் பிரிவு டயாலிசிஸ் பிரிவு, நான்கு அறுவை அரங்குகள், தற்சமயம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தினமும் வெளிப்புற மருத்துவ பயனாளிகள் 1200க்கும் மேற்பட்டோர் பயன்பெறுகின்றனர். எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் மற்றும் 20,000 சுழற்சி டயாலிசிஸ் செய்து சிறப்பான சேவைகள் செய்யப்பட்டுள்ளது. 2018-19இல் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டடம் மற்றும் ஊடுகதிர் (X-ray) உபகரணங்கள் வழங்கி வருடத்திற்கு சுமார் 20,000 மருத்துவ பயனாளிகள் பயன்பெறும் வகையில் X-ray எடுக்கப்பட்டு வருகிறது. இன்று சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 2,100 சதுர அடி பரப்பளவில் காத்திருப்போர் கூடம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

Tags : Saidapet Government ,Hospital ,Minister ,M. Subramanian ,Chennai ,Saidapet Government Hospital ,Saidapet Government… ,
× RELATED விமானத்தில் வந்தபோது திடீர்...