×

தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த நவ. 10ம் தேதியன்று, பைபர் படகில் சென்ற பாலமுருகன் (30), தினேஷ் (18), குணசேகரன் (42), ராமு (22) ஆகிய 4 மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வந்த இலங்கை கடற்படையினர், படகிலிருந்த 4 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் நான்கு பேருக்கும் இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 10 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் (இந்திய மதிப்பில் ரூ.11,700) அபராதம் விதித்து உத்தவிட்டார்.

Tags : Tamil Nadu ,Rameswaram ,Balamurugan ,Dinesh ,Gunasekaran ,Ramu ,Nambudalai ,Ramanathapuram district ,
× RELATED நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து