×

பாகிஸ்தானில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது: இம்ரான் கானின் சகோதரி கடும் தாக்கு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு ஹிட்லர் போல செயல்பட்டு பத்திரிகையாளர்களை ஒடுக்குவதாக இம்ரான் கானின் சகோதரி நோரின் நியாசி குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் தனது சகோதரரை சந்திக்க முடியாமல் தவிப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இம்ரான் கானின் சகோதரி நோரின் நியாசி தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தானில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மனித உரிமைகள் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்துள்ள நோரின் நியாசி, ‘பாகிஸ்தானில் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை.

உண்மையை பேச நினைக்கும் பத்திரிகையாளர்களைத் தேடிப்பிடித்து வேட்டையாடுவது போல அரசு செயல்படுகிறது. அவர்களை சட்டவிரோதமாக காவலில் வைத்தும், மிரட்டியும் வாய்மூடியும் இருக்கச் செய்கிறார்கள். தற்போதைய சூழல் ஹிட்லர் காலத்து சர்வாதிகார ஆட்சியைப் போல உள்ளது. பொதுமக்கள் எவ்வித விசாரணையும் இன்றி கொல்லப்படுகிறார்கள் மற்றும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தற்போதைய அரசுக்கு மக்களின் ஆதரவு துளியும் இல்லை என்பதால் அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் தேர்தல் மோசடிகள் குறித்து தெரிந்தும், சர்வதேச சமூகம் அமைதி காப்பது ஏமாற்றம் அளிக்கிறது’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Tags : Hitler ,Pakistan ,Imran Khan ,Islamabad ,Norin Niazi ,
× RELATED கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்;...