வாஷிங்டன்: லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக ஒரு மணி நேர ஆவண படத்தை ஒளிபரப்பியது. இது 2021ம் ஆண்டு டிரம்பின் உரையின் இரண்டு பகுதிகளில் இருந்து ஒரு மணி நேர இடைவெளியில் பேசப்பட்ட மூன்று மேற்கோள்களை ஒன்றாக இணைத்து வெளியிட்டு இருந்தது. இது தொடர்பாக பிபிசி நிறுவனம் கடந்த மாதம் அதிபர் டிரம்பிடம் மன்னிப்பு கேட்டு இருந்தது. மேலும் பிபிசியின் தலைமை நிர்வாக மற்றும் அதன் செய்திப்பிரிவு தலைவர் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் நேற்று பிபிசி நிறுவனத்தின் மீது அதிபர் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில், தன்னைப் பற்றி ஒரு தவறான, அவதூறான, ஏமாற்றும், இழிவுபடுத்தும், தூண்டிவிடும் மற்றும் தீங்கிழைக்கும் வகையில் உரையை சித்தரித்து ஒளிபரப்பி நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபட்டதாக பிபிசி நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிபிசி நிறுவனம் ரூ.91 ஆயிரம் கோடி நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
