×

கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லி கிலோ ரூ.3,000 எகிறியது

சென்னை: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கடப்பா, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சேலம், வேலூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, அருப்புக்கோட்டை, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டுவரப்படுகின்றன. பனிப்பொலிவு, வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.600ல் இருந்து ரூ.3,000க்கும், ஐஸ் மல்லி ரூ.500ல் இருந்து ரூ.2,500க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.400ல் இருந்து ரூ.2,000 விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் ரூ.500ல் இருந்து ரூ.1000க்கும், சாமந்தி ரூ.80ல் இருந்து ரூ.140க்கும், சம்பங்கி ரூ.50ல் இருந்து ரூ.140க்கும், அரளி பூ ரூ.200ல் இருந்து ரூ.300க்கும், பன்னீர் ரோஸ் ரூ.60ல் இருந்து ரூ.140க்கும் சாக்லேட் ரோஸ் ரூ.100ல் இருந்து ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு பூமார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில்,‘பனிப்பொழிவு, வரத்து குறைவால் மிகவும் குறைவான பூக்கள் வந்துள்ளன. இதனால், பூக்களின் விலை 5 மடங்கு உயர்ந்துள்ளது,’என்றார்.

Tags : Koyambedu ,Chennai ,market ,Andhra Pradesh ,Kadapa ,Hosur ,Thenkani Kottai ,Rayakottai ,Salem ,Vellore ,Periypalayam ,Uthukottai ,Aruppukottai ,Nilakottai ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு